முகப்பு Sites திருகோணமலை கோட்டை

திருகோணமலை கோட்டை

திருகோணமலை மாவட்டத்தில் கடவத் சதர பிரதேச செயலாளர் பிரிவில் திருகோணமலை நகரத்தில் கோட்டை அமைந்துள்ளது. மிகவும் பழங்காலத்தில் கோகண்ண என பெயரிடப்பட்டது. நகரத்தில் உயரமான இடத்திலிருக்கும் சாமி மலையை அண்மித்து இந்தக் கோட்டை நிர்மானித்துள்ளது. பௌத்த, இந்து மத தொடர்புகள் பழமையிலிருந்து இங்கு இருந்துள்ளது. இங்கிருந்த ஜைன நிகன்ட எனும் மத ஆச்சிரமத்தை உடைத்து மகசென் எனும் அரசன் (கி.பி. 275 – 724) ல் இந்த விகாரைக்கு போதனை மண்டபம் அமைத்துள்ளார். கி.பி. 1624 ல் போத்துகேய தளபதியான கொன்ஸ்டன்தினோ த ஷா என்பவனால் எல்லாவற்றையும் அழித்து கோட்டையை நிர்மானித்தான்.

அதன் பின்பு ஒல்லாந்தர்களினால் இந்த கோட்டையை விரிவுபடுத்தி உபயோகித்துள்ளார்கள். ஆங்கிலேயர்கள் இலங்கையை கைப்பற்றிய பின்பு கோட்டையை இன்னும் விரிவுபடுத்தி அதை பேதிரிக் கோட்டை என பெயரிடப்பட்டது. இந்த கோட்டையை அண்மித்து இடைக்கிடை செய்த அகழ்தலின் போது புரான பௌத்த இந்து தொல்லியல் பெறுமதிமிக்க சிலைகள் கண்டு பிடுத்துள்ளார்கள்.

16 ம் நூற்றாண்டிற்கு சேர்மதியான தமிழ் கல்வெட்டொன்று கோட்டைக்கு பிரவேசிக்கும் கதவை அண்மித்த மதிலில் வைத்துள்ளது. இங்கிருந்த இந்து தேவாலயத்தை போத்துகேயர்களினால் அழிக்கப்பட்டதென அதில் கூறப்படுகின்றது. 1945 ல் விஷ்னுவுடையவும் லக்ஷ்மிவுடையவும் இரண்டு சிலைகளும் கி.பி. 1223 கு சேர்மதியான சமஸ்கிருத கல்வெட்டும் கண்டு பிடித்துள்ளது. சோடகங்கதேவ என்பவர் வந்திரங்கியதைப் பற்றி அதில் குறிப்பிடுகின்றது. இதை அண்மித்து அனேக பௌத்த சிலைகள் கிடைத்துள்ளது. இடைக்கிடை இதை அண்மித்த கடலில் சுழியோடுபவர்களால் இவை கரைக்கு கொண்டு வந்ததோடு கோகன்ன விகாரையும் சிதைவுகளும் கோட்டைக்குள் காணக் கிடைக்கின்றது.