முகப்பு Sites முன்னேஸ்வரம் தேவாலயம்

முன்னேஸ்வரம் தேவாலயம்

சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் சிலாபம் குருணாகல் பாதையில் அமைந்துள்ள முன்னேஸ்வரம் ஆலயம் ராவணா அரச காலத்திலிருந்து வருவதாக பேச்சுவழக்கில் உள்ளது. கி.பி. 1448 ல் இலங்கையை ஆட்சி செய்த 6 வது பராக்கிரமபாகு அரசன் இந்த ஆலயத் தொகுதியை புனரமைத்து பூஜைகள் நடத்தியதாக சொல்லப்படுகின்றது. தேவாலய தொகுதிக்குள் பிரதான தேவாலயம் மகா விஷ்னுவின் ஆலயமாகும். மேலதிகமாக ஐயநாயக்க, கதிர்காம, பத்திரகாலி, பிள்ளையார், பத்தினி, சிவலிங்க போன்ற தேவாலயங்களும் காணக் கிடைக்கின்றது. மிகவும் பழமையிலிருந்தே மிக பிரசித்தமான முன்னேஸ்வரம் தேவாலயத்தில் நிரந்தரப் பூஜைகள் போன்றவை நடத்துகின்ற படியால் அங்குள்ள சகல கட்டிடங்களும் இடைக்கிடை திருத்தல் வேலைகளுக்கு உற்படுத்தியுள்ளது. இங்குள்ள அனேக பழமையான பகுதிகள் அழிவடைந்ததோடு புரான கதவு நிழைகள், கற் தூண்கள் போன்றவை இன்னும் எஞ்சியுள்ளது. மகா விஷ்னுவின் கல்லிலான பழமையான தேவாலயம் நன்றாக பாதுகாக்கப்பட்டுள்ளது. வர்ணம் தீட்டும் வேலைகள் நிரந்தரமாக நடைபெறுகின்றது. ஆலயத் தொகுதிக்குள் உள்ள எல்லாச் சிலைகளும் புரானத்தில் கல்லிலானவையாகும். இந்த சிலைகள் யாவும் இந்தியாவிலிருந்து கொண்டு வந்தவை என சொல்லப்படுகின்றது.