முகப்பு Sites பிச்சந்தியாவ

பிச்சந்தியாவ

நவகத்தேகம பிரதேச செயலாளர் பிரிவில் வெலேவெவ கிராம அலுவலர் பகுதியில் அமைந்த பிச்சந்தியாவ ஒரு பாறையை அண்மித்துள்ள குகை ஆச்சிரமத் தொகுதியாகும். புத்தளத்திலிருந்து அனுராதபுரப் பாதையில் ஒன்பதாம் மையில் கட்டையடியால் திரும்பி ஒன்பது மைல் போனபோது இந்த விகாரை பூமிக்கு போகலாம். விகாரை பூமியில் நீர்வடி வெட்டப்பட்ட குகைகளும் சிதைவடைந்த கட்டிடத் தொகுதிகளும் காணக் கிடைக்கின்றது. இலங்கையின் மிகப் புரான குகைக் கல்வெட்டுகள் இரண்டு இங்கு காணக் கிடைக்கின்றது. அந்த கல்வெட்டுகளின் படி இந்த குகைகளை கொபுகி எனும் பிராமணன் அர்ப்பணம் செய்துள்ளது. கல்வெட்டில் குறிப்பிடும் விதத்தில் இவர் தெவன பிய காமினி நிஸ எனும் அரசனுடைய ஆசிரியரும் வைத்தியரும் ஆவார். கல்வெட்டில் வைத்தியரை குறிப்பிடும் முதலாவது தடவை இதுவாகும்.