முகப்பு Sites அரன்கெலே

அரன்கெலே

வடமேற்கு மாகாணத்தின் குருணாகல் மாவட்டத்தில் கணேவத்த பிரதேச செயலகப் பிரிவில் அரன்கெலே புரான பிக்குகளின் ஆச்சிரமம் மிகப் பழமையான காலத்தில் தவத்தில் இருக்கும் பிக்குமார்களுக்காக அமைக்கப்பட்ட ஆச்சிரமங்களில் இலங்கையில் முக்கியமான இடமாகும்.

இந்தப் பெயர் தீவில் மிகவும் பிரசித்தமானது. அரஹத் எனும் கருத்தில் (மிகவும் சக்தி வாய்ந்த) கொண்ட பிக்குமார்கள் வசித்த காடு என பெயர் உண்டானது என சொல்ல முடியும். ஆராம கலே எனும் சொல்லிலிருந்து வந்ததுதான் இந்த அரன்கெலே என்பதாகும்.

இயற்கையான காட்டு ஆச்சிரமமாக அமைந்த இந்த பௌத்த பிக்கு ஆச்சிரமத்தில் பதாநகர, சன்தாகர, போதிகர, குளங்கள், நடைபாணித் தவப் பாதைகள், குகைள் போன்ற கட்டிடங்கள் நூற்று கணக்காக உள்ள மலைச் சரிவுகளிலும் சம பூமிகளும் இங்கு காணக் கிடைகின்றது. புண்ணிய பூமியில் உள்ள கட்டிடங்களில் வயது முதிர்ந்த நோய்வாய்ப்பட்ட, பிக்குமார்களுக்காக அமைத்த சுடு நீர் மண்டபம் எனும் சன்தாகர எனும் கட்டிடம் விசேட இடமாகும். இந்த இடம் சுடு நீர் ஸ்நானம் செய்வதற்கும் சூடான ஆவி சிகிச்சை மருந்துகள் கலந்த நீர் போன்றவை குழிப்பதற்கும் உபயோகப்படுத்தியுள்ளது. கட்டிடத்திற்குள் தண்ணீர் சுட வைத்த அடுப்புகளும் மருந்துகள் அரைப்பதற்கு பாவித்த அம்மிக் கல்களும் காணக் கிடைக்கின்றது.

இங்குள்ள சங்கமனாகாரய எனும் இடம் நடை பாணியில் தவம் செய்யும் கூரை உள்ள மண்டபமாகும். இந்த கட்டிடத்தை அண்மித்து மலசல கூடம் போன்ற அம்சங்கள் அமைத்துள்ளது.

தண்ணீர் நிரம்பிய குளங்களும், நடை பாணியில் தவம் செய்யும் நீண்ட பாதைகளும், பிக்குமார்கள் வதிவிடங்களும், கட்டிடங்களும், போதிகரைகளும் போலவே தவத்திலிருக்கும் பிக்குமார்கள் பாவித்த பதாநகர கட்டிடங்களும் இந்த பூமியில் இடத்திற்கு இடம் அமைந்துள்ளதை காணக் கிடைக்கின்றது.