முகப்பு Sites சொரணாதொட புதுகேகந்த குகை விகாரை

சொரணாதொட புதுகேகந்த குகை விகாரை

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் சொரணாதொட பிரதேச செலாளர் பிரிவில் அமைந்துள்ளது. பதுளையிலிருந்து பதஹவத்தைக்கு போகும் பாதையில் 4 மைல் அளவு தொலைவில் அமைந்துள்ளது.

இங்கு மிக புரான சின்னம் குகை விகாரையாகும். நீர்வடி வெட்டப்பட்ட குகையின் முன்னிலையில் மேயப்பட்ட கூரையும் மண்ணினால் செய்த சுவர்களினால் விகாரை மண்டபம் நிர்மானித்துள்ளது. உட்பிரவேசிக்கும் வாசலின் இரு பக்கத்திலும் மகர தோரணமும் காவற்காரரின் உருவங்களும் காணக் கிடைக்கின்றது. குகை விகாரைக்குள் சயனிக்கும் புத்தர்ச் சிலையொன்று காணக் கிடைக்கின்றது. வணங்குதல் செய்யப்படும் பன்னிரண்டு இடங்களும் புத்தரின் ஏழு வாரங்கள் கழித்த இடங்களும் சூவிசி விவரண எனும் பௌத்த நிகழ்ச்சிகள் உள்ளடங்கிய சம்பவங்களினால் சுவர்களை சித்திரங்களால் அலங்கரித்துள்ளது. முகட்டின் ஓவியங்களாக தாமரைப் பூக்களின் வடிவங்கள் அன்னபட்சிப் பூட்டு ஓவியங்கள் வரைந்துள்ளது. உட்பிரவேசிக்கும் வாசலில் வெஸ்ஸந்தர எனும் ஜாதகக் கதையும் மற்றைய சுவர்களில் தேவாராதனைச் சித்திரங்கள் காணக் கிடைக்கின்றது. இங்குள்ள புத்தச் சிலைகளும் ஓவியங்களும் கண்டி யுகத்து கலை வடிவங்கள் கொண்டதாகும்.

குகை விகாரைக்கு புதிய அம்சமாக பிக்குமார் வதிவிடம், போதனை மண்டபம் போன்றவை சேர்த்துள்ளது. தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்ட சின்னமாக பிரகடனப்படுத்தியுள்ளது.