முகப்பு Sites வெலேகடே புரான வியாபாரத் தலம்

வெலேகடே புரான வியாபாரத் தலம்

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் பதுளை பிரதேச செயலாளர் பிரிவில் பதுளை கிராமத்தில் அமைந்துள்ளது.

பதுளை – பண்டாரவலை பாதையில் பதுளை வைத்தியசாலை அருகில் இதைக் காணக் கிடைக்கின்றது.

1818 ல் மலைநாட்டு ஒப்பந்தத்தின் பின் ஆங்கிலேய அரசு மூலம் பதுளை நகரத்தில் செய்வித்த வியாபார நிலையம் இதுவென அறிந்துள்ளது. 1889 ல் நிர்மானித்த இந்த வியாபார நிலையம் ஒரு வயலுக்கு மேற் பக்கமாக நிர்மானித்த படியால் "வெலேகடே" என பிரசித்தமானது. இந்த கட்டிடம் மர சிலாகைகள் உள்ளதாக நிர்மானித்துள்ளது. அவைகளில் சில மர சிலாகைகள் மாத்திரம் எஞ்சி இருந்தபடியால் தொல்லியல் திணைக்களம் மூலம் அவை பேணிப் பாதுகாத்துள்ளது. British Architecture in Sri Lanka எனும் நூலில் இந்த இடத்தைப் பற்றிய விரிவான விபரங்கள் குறிப்பிட்டுள்ளது. என்கோண நடு முற்றம், உட்பிரவேசிக்கும் நான்கு வாசல்களும் சிலுவையின் வடிவமாக மேல் கூரையும் கீழ் கூரையாகவும் இந்த கட்டிடத்தை நிர்மானித்துள்ளது. இது இலங்கையில் நிர்மானித்த முதன் முதலான சுதந்திர கட்டிடமாக மதிக்கப்படுகின்றது. இந்தக் கட்டிடமும் அண்மித்தக் கட்டிடங்களும் சிலுவையின் வடிவமாக நிர்மானித்துள்ளதாக காணக் கிடைக்கின்றது. இவைகள் தெல்லியல் கட்டிடக்கலைப் பெறுமதிகளை காக்கும் விதமாக பேணிப் பாதுகாக்கப்பட்டுள்ளது.