முகப்பு Sites ராவணாஎல்ல புரான விகாரை

ராவணாஎல்ல புரான விகாரை

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் எல்ல பிரதேச செயலாளர் பிரிவில் 69 ஏ ராவணாஎல்ல கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளது.

பண்டாரவலையிலிருந்து எல்ல வெல்லவாய பாதையில் எல்ல நகரத்தை கடந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள 16 ம் மைல் கல்லை அண்மித்து வலது பக்கம் உள்ள சிறிய பாதையில் 1½  கி.மீ. போகையில் இந்த இடம் சந்திக்கின்றது.

உயர்ந்த மலை இறக்கத்தில் உள்ள கற் குகைக்குள் அமைந்துள்ள இந்த விகாரை கி.மு. 2 ம் நூற்றாண்டில் வலகம்பா அரசன் தொடக்கி வைத்ததென மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது. நீர்வடி வெட்டப்பட்ட குகைகள் ஓவியங்கள் சிலைகள் கண்டி யுகத்தைச் சித்தரிக்கின்றது.

குகை விகாரையிலுள்ள சித்திரங்களில் குகையின் முகட்டு பகுதியில் உள்ள மெல்லிய பூச்சின் மேல் வரையப்பட்ட தாமரை வடிவங்கள் மரக்கொடிகள்ன் பூக் கொடிகளின் வடிவங்களும் உள்ளது. இங்குள்ள மூர்த்திகள் பழயவையானாலும் அதன் மேல் புதிய வர்ணங்கள் பூசப்பட்டுள்ளது. குகையின் பழமையான சுவர்களும் ஓடுகள் மேய்ந்த கூரையும் உக்கிய நிலையில் உள்ளபடியால் புதுப்பித்துள்ளது.

மிக பிரசித்தி பெற்ற ராவணாஎல்ல கற் குகை இதை அண்மித்து அமைந்துள்ளதோடு பல தடவைகள் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்தல் ஆராய்ச்சிகள் செய்து 25000 ம் வருடங்கள் பழமைவாய்ந்த மனித தடயங்கள் இருந்ததாக கண்டுபிடித்துள்ளார்கள்.