முகப்பு Sites முதியங்கனை ரஜமகா விகாரை

முதியங்கனை ரஜமகா விகாரை

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் பதுளை நகர மத்தியில் அமைந்துள்ளது.

கொழும்பு – பண்டாரவலை பாதையில் அல்லது கண்டி – நுவரெலியா பாதையில் பதுளை நகரத்திற்கு வந்து மட்டக்களப்பு பாதையில் சிறிய தூரம் போகையில் பாதையின் வலது பக்கம் அமைந்துள்ளது.

பதுளை பிரதேசத்து புண்ணிய பூமிகளில் முக்கியமான இந்த இடம் தீவிலுள்ள வணக்கத்திற்குறிய பன்னிரெண்டு இடங்களில் ஒன்றாகும். மக்களின் பேச்சு வழக்கில் குறிப்பிடுவது முத்துகளாக மாறிய புத்தரின் வியர்வைத் துளிகள் இந்த இடத்தில் அடக்கம் செய்ததாகும். புத்தகோஷ தேரரின் சமன்தபாசாதிகா எனும் நூலில் புத்தர் ஞானம் பெற்று எட்டாவது மாதம் இலங்கைக்கு வந்த மூன்றாவது முறை இந்த இடத்திற்கு வந்ததென குறிப்பிடுகின்றது. மஜ்ஜிம எனும் புத்த பிரிவைச் சேர்ந்த நூலில் மலியதேவ எனும் மிக சக்திவாய்ந்த தேரர் சரக்க சூத்ரய எனும் போதனையை இந்த இடத்தில் நெய்ததாக குறிப்பிடுகின்றது. இன்னுமொரு பேச்சு வழக்கின் படி தேவானம்பியதிஸ்ஸ அரசன் பண்ணிரண்டு போதி மரங்களில் ஒன்று இங்கு நாட்டியதென்றும் கோபுரத்தை விரிவாக்கி செய்ததென்றும் சொல்லப்படுகின்றது.

விகாரை வாசலின் தோரணம், தாதுகோபுரம், விகாரை மண்டபம், அஷ்டபல போதிகரை இங்கு விசேஷ அம்சங்களாகும். சமாதி நிலையிலான புத்தர் சிலையின் இரு பக்கத்தில் 2 மயில் உருவங்களுடனான மகர தோரணம் முக்கிய இடம் வகிக்கின்றது. கற் பலகை, கற் தூண்கள், வெஸ்ஸன்தர எனும் ஜாதகக் கதை என்பனவற்றின் துணியில் வரையப்பட்ட சித்திரங்கள் இங்கு இருக்கின்றது. ஊர்வலமாக இந்த துணியில் வரையப்பட்ட ஓவியங்கள் நமுனுகுல மலைக்கு எடுத்துக் கொணடு போவதனால் மழை உண்டாகுமென சொல்லப்படுகின்றது. தொல்லியல் பாதுகாக்கப்பட்ட சின்னமாக பிரகடனப் படுத்தியுள்ள இந்த இடம் 1979 ல் புண்ணிய பூமியாக பெயரிட்டுள்ளது.