முகப்பு Sites புதுகல் கே – கோண்கெடிய

புதுகல் கே – கோண்கெடிய

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் புத்தலை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த கோண்கெடிய கிராமத்தில் அமைந்துள்ளது.

புத்தலை கதிர்காமப் பாதையில் புத்தலையிலிருந்து 4½ மைல் தெற்கு பக்கத்தில் இது அமைந்துள்ளது.

இந்த இடம் காட்டினால் சூழப்பட்ட மலை இறக்கமாகும். இங்கு பெரிய கற் குகையும் அக் குகைக்கு பிரவேசிப்பதற்கு நீணட் படிக்கட்டுகளும் இருக்கின்றது. இந்த குகைக்குள் சயனிக்கும் புத்தர்ச் சிலை உள்ளது. கல்லினால் செதுக்கிய அமர்ந்த நிலையிலான புத்தர்ச் சிலையும் இருக்கின்றது. அதைத் தவிர அரச உருவத்திற்கு சமமாக செதுக்கப்பட்ட உருவம் உள்ளதோடு அது துட்டகைமுனு அரசனின் உருவமென நம்பப்படுகின்றது. குகைக்கு வடக்கு திசையில் பிரஹ்மி எழுத்துகளுடனான பல கல்வெட்டுகள் இருக்கின்றது.