முகப்பு Sites ஊருசிடா வெவே சொரொவ்வ (ஊருசிடா வாவியின் மதகு)

ஊருசிடா வெவே சொரொவ்வ (ஊருசிடா வாவியின் மதகு)

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த மஹகம எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.

அம்பாந்தொட்டை - சூரிய வெவ மஹகம பாதையில் மஹகமயிலிருந்து ஒரு மைல் கிழக்கு பக்கமாக அமைந்துள்ளது.

மட்டப்படுத்தப்பட்ட கலுங்கல்லினால் செய்துள்ள மதவில் உள்ள நாகங்களின் உருவங்களினால் இது மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. மிக அழகான ஏழு படங்களுடனான நாக உருவத்தின் நடுவே உள்ள நாக படத்தில் மகரதோரணம் காணக் கிடைக்கின்றது. நாக உருவங்களுக்கு கீழ் கல்லில் நான்கு சிங்க உருவங்கள் செதுக்கியுள்ளது. மழைக்கு தலைமைத்துவமும் நீர் பாதுகாப்பிற்கும் இது போன்ற இடங்களில் இந்த மாதிரியான நாக உருவங்கள் செதுக்குவது அந்த நாள் தொடக்கம் நடைமுறையில் இருந்ததாகும்.