முகப்பு Sites வத்தேகம புரான விகாரை

வத்தேகம புரான விகாரை

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் சியபலாண்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் வத்தேகம கொடியாகலயில் இந்த விகாரை அமைந்துள்ளது.

கொழும்பிலிருந்து அம்பாறைப் பாதையில் கொடயான சந்தியில் இறங்கி கொடியாகல வரையிலான பஸ்சில் இந்த இடத்திற்கு போவதற்கு முடியும்.

மக்கள் பேச்சு வழக்கு தடையங்களின்படி சத்தாதிஸ்ஸ அரசன் காலத்தில் செய்வித்த விகாரையாக மதிக்கப்படுகின்றது. உடைந்து வீழ்ந்த புரான தாது கோபுரமும், கற் தூண்களும், கல்லிலான படிக்கட்டுகளும் இங்கு சிதைவடைந்துள்ளது. விகாரையில் காணக் கிடைக்கும் ஓவியங்களும் மூர்திகளும் கண்டி யுகத்தைச் சார்ந்ததாகும். 30 அடி நீளமும் 23 அடி அகலமும் உள்ள விகாரை கட்டிடம் இரண்டு மாடிகளால் உள்ளது. விகாரை மண்டபத்திலுள்ள ஓவியங்களுக்குள் பூக்களின் வடிவமைப்பும் மிருகங்களும் ஜாதகக் கதைகளும் காணக் கிடைக்கின்றது. அதேபோல் மரக் கொடி வடிவங்களும் கடல் கண்ணிகளின் உருவங்களும் உள்ளது. அப்படியே காவற்காரர்களின் உருவங்கள், சிங்க உருவங்கள், பிரதான சமாதி புத்தர் சிலையும், புத்தரின் பிரதான இரு சீடர்களாகிய சரியுத், முகலன் என்பவர்களின் உருவங்களும் காணக் கிடைக்கின்றது. இந்த ஓவியங்களும் உருவங்களும் அழிந்த நிலையில் உள்ளதோடு அவை தொல்லியல் திணைக்களத்தினால் பேணிப் பாதுகாக்கப்பட்டது.