முகப்பு Sites யுதங்கனாவை

யுதங்கனாவை

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் புத்தலை பிரதேச செயலாளர் பிரிவில் யுதங்கனாவை கிராமத்தில் அமைந்துள்ளது.

வெல்லவாய மொனராகலைப் பாதையில் வெல்லவாயவிலிருந்து 16 கி.மீ. போனபோது சந்திக்கும் யுதங்கனாவை சந்தியால் இடது பக்கம் உள்ள பாதையில் 1½ கி.மீ. போகின்ற போது இந்த கோபுரத்தை காணலாம்.

கி.மு. 2 ம் நூற்றாண்டில் துட்டகைமுனுவும் சத்தாதிஸ்ஸ இளவரசனும் யுத்தம் செய்த இடம் பின்பு அவ்விடத்தை யுதங்கனாவை ஆனதாக சொல்லப்படுகின்றது. அதைத் தவிர 12ம் நூற்றாண்டில் பராக்கிரமபாகு அரசன் தனது தாயாரான ரத்னாவலீ அரசியாருடைய ஆஸ்தி அடக்கம் செய்து இந்த கோபுரத்தை செய்வித்ததாக இன்னுமொரு கருத்தாகும்.

இந்த தாது கோபுரம் ஊவா மாகாணத்தில் அமைந்த மிகப் பெரிதான கோபுரமாக அறிந்துள்ளது. காலத்தைச் சரிவரத் தெரியாத இந்த கோபுரத்தை அண்மித்து கண்டி காலத்து விகாரை மண்டபம் ஒன்று உள்ளது. ஆனால் கொட்டவெகெரயின் மாதிரிக்கு அமைத்ததாக மதிக்கப்படும் தெதிகம சூதிகர கோபுரம், பொலன்னறுவையில் உள்ள தெமல மகா சாய எனும் கோபுரம், யுதங்கனாவை கோபுரம் ஒரே சமமாக உள்ளதாக கருதப்படுகின்றது. இந்த கோபுரங்கள் மூன்றும் செங்கட்டிகளினால் அரைவாசியாக செய்திருப்பதனால் ஒரே காலத்திலானவை என ஊகிக்கலாம்.