முகப்பு Sites மயுரகிரிய

மயுரகிரிய

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் மொனராகலை பிரதேச செயலாளர் பிரிவில் 130 பீ வெலியாய கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளது.

மொனராகலை நகரத்திலிருந்து பொத்துவில் பாதையில் 4 கு மைல் போகின்ற போது சந்திக்கும் வெலியாய பாடசாலை அண்மித்து முன்னால் உள்ள படிக்கட்டுகள் உள்ள பாதையில் 1 கி.மீ. மேல் பக்கம் ஏறும்போது பிக்குமார் வதிவிடமும் அதிலிருந்து ¼ கி.மீ. அளவு போகும்போது புரான விகாரையும் காணக் கிடைக்கின்றது.

மகா பராக்கிரமபாகு ஆட்சிக் காலத்தில் இப்பிரதேசம் சுகலா எனும் அரசியாரின் ராஜ்யமாக இருந்ததெனவும் இச் சமயத்தில் தலதா எனும் புணித சின்னம் இவ்விடத்தில் வைத்ததென்றும் சொல்லப் படுகின்றது. புணித சின்னத்தை வைத்த மாளிகை கட்டிடத்தின் சிதைவுகள் இங்கு இருக்கின்றது. அதிகளவு கற் குகைகள் அமைந்த இந்த இடத்தில் மிக சக்திவாய்ந்த பிக்குமார்கள் இங்கு வசித்ததாக சொல்லப்படுகின்றது. 40 அடி நீளமான 30 அடி அகலமும் உள்ள இந்த புரான குகை விகாரை சுவர்களில் பூக்களினதும் புத்தரின் ஏழு வாரங்கள் சம்பந்தப்பட்ட ஓவியங்களும் 27 அடி நீளமான சயனிக்கும் புத்தர்ச் சிலையும் சமாதி நிலையிலான 17 புத்தர்ச் சிலைகளும் நிற்கும் நிலையிலான 7 புத்தர்ச் சிலைகளும் செய்துள்ளது. அறிமுகம் செய்து கொள்ள முடியாதபடி அழிவடைந்த 2 சிலைகளும் பிரவேசிக்கும் வாசலில் மகர தோரணமும் இரு பக்கம் காவற்காரரின் சிலைகளும் சிங்க உருவங்களும் செய்துள்ளது. புதையல் கள்வர்களினால் அழிவடைந்த இங்கு பேணி பாதுகாக்கும் பணிகள் தொல்லியல் திணைக்களத்தினால் செய்துள்ளது.