முகப்பு Sites வில்கம் ரஜமகாவிகாரை

வில்கம் ரஜமகாவிகாரை

அம்பலாந்தொட்டை – பெரகம எனுமிடத்தில் அமைந்துள்ள இந்த விகாரை அம்பலாந்தொட்டை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.

பிக்குனிகளின் ஆச்சிரமமாக அமைந்த வில்கம் விகாரை காவன்திஸ்ஸ அரசனால் செய்வித்ததென சுமங்கள விலாவினி எனும் நூலில் குறிப்பிடுகின்றது. பெமினிதிஸா எனும் வரட்சி ஏற்பட்டதும் இந்தக் காலத்திலாகும். திஸ்ஸமகாராமையின் தலைமை பிக்குவின் சகோதரியும் இந்த விகாரையில் இருந்ததற்கான தடையங்கள் இந்த நூலில் உள்ளது.

பழமையான தூபியை தற்சமயம் திருத்தியமைத்ததோடு விகாரைத் தொகுதியைச் சுற்றி ஒரு மதிலை நிர்மானித்திருந்ததாக தெரிகின்றது. உட்பிரவேசிக்கும் வாசல் உள்ள இந்த சமயக் கட்டிடங்கள் உள்ள முற்றத்தை அண்மித்து நீர் அகழி இருந்ததற்கான தடயங்களும் இருக்கின்றது. இந்த ஆக்கங்களின் வடிவத்தின் படி பப்பத விகாரையின் அழகு இந்த வில்கம் விகாரை கட்டிடக் கலைகளினால் ஊர்ஜிதமாகின்றது.