முகப்பு Sites திஸ்ஸமகாராமை

திஸ்ஸமகாராமை

திஸ்ஸமகாராமை வாவியை அண்மித்திருக்கும் இந்த விகாரை திஸ்ஸமகாராமை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்ததாகும்.

பௌத்தர்கள் புத்தரின் பாத ஸ்பரிசம் பெற்ற பன்னிறண்டு இடங்களில் ஒரு இடமாக திஸ்ஸமகாராமையை வணங்குகின்றார்கள். மகாவம்சத்தில் குறிப்பிட்டுள்ள காவன்திஸ்ஸ அரசன் செய்வித்த சிலாபஸ்ஸ பிரிவெனா விகாரை திஸ்ஸமகாராமயாக மதிக்கப்படுகின்றது. ஆனாலும் திரு. ஹென்ரி பாக்கர் அவர்கள் திஸ்ஸமகாராமை தாது கோபுரம் மகாநாக அரசன் செய்வித்ததென நம்புகின்றார். முகாசம்சத்தின் படி இலநாக அரசன் (கி.பி. 35 – 44) திஸ்ஸமகாராமை கோபுரத்தை பெரிதாக்கி பேணப்பட்டதோடு திரும்பவும் வோஹாரிக திஸ்ஸ அரசன் (கி.பி. 214 – 236), I வது விஜயபாகு அரசன் (கி.பி. 1055 – 1110) என்னும் ஆண்டுகளில் திருத்தியமைத்துள்ளார்கள்.

கி.பி. 2 ம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகள் இரண்டில் "அகுஜு" மஹகம அல்லது அகுஜுக எனும் பெயரில் இந்த விகாரையை அறிமுகப்படுத்தியதோடு, மகாநாம அரசனுடைய (கி.பி. 410 – 432) கல்வெட்டில் மஹகம ரஜமகா விகாரையாக அறிமுகம் செய்து பலிதொடுகம எனும் காணியை விகாரைக்கு அர்ப்பணம் செய்ததாக குறிப்பிடுகின்றது. தப்புல அரசனின் தெடகமுவ கல்வெட்டில் "மஹ வெகெர" என்று அறிமுகப்படுத்தியுள்ளது. 10 ம் நூற்றாண்டைச் சார்ந்த கிரிந்த கல்வெட்டில் இடது தந்த தாதுவை திஸ்ஸமகாராமை தூபியில் அடக்கம் செய்ததாக குறிப்பிடுகின்றது. தென் இலங்கையில் பௌத்த கல்வி நிலையமாக கி.மு. 3 ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 11 ம் நூற்றாண்டு வரையில் மிக பிரபல்யமான இடமாக இந்த விகாரை முக்கிய இடம் வகிக்கின்றது.