முகப்பு Sites சிதுல்பவ்வ விகாரை

சிதுல்பவ்வ விகாரை

திஸ்ஸமகாராமை – யோதகண்டிய பாதையில் யால சரணாலயத்திற்கு 18 மைல் அளவு போகும்போது சிதுல்பவ்வை விகாரைக்கு பிரவேசிக்க முடியும். திஸ்ஸமகாராமை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்ததாகும்.

வம்சக் கதைகளிலும் கல்வெட்டுகளிலும் தடயங்கள் மூலம் சித்தலபப்பத விகாரையாக அறிமுகம் செய்யும் இந்த விகாரை காவன்திஸ்ஸ அரசன் (கி.பி. 100 – 140) இதை செய்ததாக மதிக்கப்படுகின்றது. மகாவம்சத்தில் குறிப்பிடும் மாதிரிக்கு தான சாலைகள், போதனை மண்டபங்கள் போன்ற அம்சங்களால் நிரம்பிய இந்த விகாரையைச் செய்வித்து ஏழு நாட்கள் பூஜைகள் நடாத்தி காவன்திஸ்ஸ அரசன் விகாரையை பிக்குமார்களுக்கு அர்ப்பணம் செய்துள்ளார். அனுராதபுரத்து மகா விகாரைக்கு சமமாக ஊருகுனையிலான மகா விகாரையாக இந்த சித்தலபப்பத விகாரையை அறிமுகப்படுத்தலாம். வசப எனும் அரசன் இவ்விடத்தில் 10 தூபிகள் செய்வித்ததோடு பிற் காலத்தில் மகா தாடிக, மகா நாக, அமன்ட காமினீ எனும் அரசர்களின் ஆட்சி காலங்களில் திரும்பவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மஹல்லக நாக, தப்புல அரசர்களின் ஆட்சி காலத்திலும் இந்த விகாரைக்கு விதவிதமான அர்ப்பணிப்புகள் செய்துள்ளதோடு விகாரை பூமியிலிருந்து தற்சமயம் அனேக குகைக் கல்வெட்டுகள் அறிமுகமாகின்றது. இவைகளுக்கிடையில் தசமகா யோத எனும் மிக பலம் வாய்ந்த வீரர்களான நன்திமித்ர, வேலுசுமன போனறவை செய்த குகை பூஜைகள் பற்றிய கல்வெட்டுகளும் கண்டுபிடித்துள்ளார்கள். கொரவக் லென அறிமுகமாகும் குகையில் அனுராதபுர யுகத்தைச் சார்ந்த ஓவியங்கள் காணலாம்.

இதற்கு மேலதிகமாக தொல்லியல் தடயங்களாக கற் புத்தர் சிலைகள், போதி சத்வர் சிலைகள், சிலை மண்டபங்கள், வடதா கெவல் போன்றவை சகல பிரதேசம் முழுவதும் பரவியுள்ள சிதைவுகளும் கட்டிடங்கள் தூபி போன்றவையின் மேடுகளும் இங்கு காணலாம்.