முகப்பு Sites ராஜகுலவடன விகாரை

ராஜகுலவடன விகாரை

வெலிகம நகர எல்லைக்குள் அமைந்த ராஜகுலவடன விகாரை வெலிகம அக்ரபோதி விகாரையின் ஒரு பகுதியாக மதிக்கப்படுகின்றது. இது வெலிகம பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்ததாகும்.

பொலன்னறுவை யுகத்தில் கல்யாணவதீ அரசியாரின் ஆட்சி காலத்தில் (கி.பி. 1202 – 1208) தளபதியான ஸ்வராஜ குலவர்தன தேவாதிகாரீ என்பவர் அக்ரபோதி விகாரைக்காக செய்வித்த பிரிவெனாவாக இது மதிக்கப்படுகின்றது. கோகில சம்தேச எனும் நூலில் இந்த விகாரையைப் பற்றி குறிப்பிடுகின்றது.

IV வது புவனெகபாகு அரசனால் செய்த கொடுப்பணவை குறிப்பிடும் ராஜகுலவடன விகாரை கல்வெட்டில் நாலபுரத்திலிருந்து வரும் ஒரு நாளுக்கு மாத்திரம் உணவளிப்பதாகவும், இதை களு பராக்கிரமபாகு எனும் மந்திரியால் வேலையாட்களுக்கு கூலி கொடுத்து செய்வித்ததாகவும் குறிப்பிடுகின்றது. இன்னும் விகாரையை நடத்திச் செல்வதற்காக ஒரு தென்னந் தோப்பு விலை கொடுத்து வாங்கி அர்ப்பணித்ததாகவும் விபரங்கள் உள்ளது.