முகப்பு Sites பதம்வெல கனேகொட புரான விகாரை

பதம்வெல கனேகொட புரான விகாரை

முருதமுரே பிரதேச செயலாளர் பிரிவில் பதம்வெல கனேகொட கிராமத்தில் அமைந்துள்ளது.

கனேகொட புரான விகாரை பூமியிலுள்ள தாது கோபுரம், விகாரை மண்டபம், குளம், புரான போதனை மண்டபம், கல்வெட்டு தொல்லியல் சின்னங்களாகும். அதேபோல் அனுராதபுர யுகத்தைச் சர்ந்த கல்லினால் செய்த கால் கழுவும் கல்லும் பூ வைக்கும் ஆசனமும் இங்கு உள்ளது. விகாரை மண்டபத்து ஓவியங்கள் கண்டி சம்பிரதாயத்தைச் சார்ந்தவையாகும். இங்கு புரான விகாரையில் சிலைகள் சிலவற்றை வைத்துள்ளது.

விகாரை பூமியிலுள்ள தூபி கி.பி. 1954 ல் திருத்தப்பட்டு இருந்தாலும் புரான தாது கோபுரம் அனுராதபுரத்து யுகத்ததைச் சார்ந்ததாக நம்ப முடிகின்றது.