முகப்பு Sites வெலிகம அக்ரபோதி ரஜமகா விகாரை

வெலிகம அக்ரபோதி ரஜமகா விகாரை

போதி வம்சதில் உள்ள விபரங்களின் படி ஸ்ரீ மகா போதி மரத்திலிருந்து பெற்றுக் கொண்ட ஒரு போதி மரக் கண்டு இந்த இடத்தில் உள்ளது. அது போலவே உருகுனையை ஆட்சி செய்த IV வது அக்கபோதி அரசனின் (கி.பி. 667 – 683) அனுசரணையுடன் இந்த விகாரை நிர்மானித்த படியால் இந்த பெயர் கிடைத்ததென மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது. பொலன்னறுவை காலத்தில் கல்யானவதீ அரசியாரின் தளபதியான படராஜ குலவர்தன தேவாதிகாரீ என்பவரால் அக்ரபோதி விகாரைக்கு ஒரு பிக்கு பிரிவெனா செய்ததென வம்சக் கதைகளில் குறிப்பிடுகின்றது. IV வது பராக்கிரமபாகு அரசனால் (கி.பி. 1302 – 1326) இந்த விகாரைக்கு சிலை மண்டபம் செய்வித்ததெனவும் IV வது புவனெகபாகு அரசனும் (1341 – 1351) சேனாதிலங்கார எனும் தளபதியும் விகாரையின் பூஜை செயற்பாடுகள் செய்ததற்கான தடயங்கள் உள்ளது. அன்னப்பட்சி, புறா போன்ற சம்தேச காவியங்களில் புரான அக்ரபோதி விகாரைப் பற்றி குறிப்பிடுகின்றது. 12 ம் நூற்றாண்டில் எல்கிரிய எனும் ஊர் இந்த விகாரைக்கு அர்ப்பணம் செய்ததற்கான தடயங்கள் உள்ளது. போத்துகேய ஆக்கிரமிப்பின் காரணமாக இப் பிரதேசத்திலுள்ள மற்றைய விகாரைகளைப் போலவே இந்த விகாரையும் அழிவடைந்துள்ளது. திரும்பவும் கண்டி ஸ்ரீ ராஜசிங்ஹ ஆட்சி காலத்தில் திருத்தியமைக்கப்பட்ட இந்த விகாரைக்கு அரசனால் செய்யப்பட்ட அர்ப்பணங்ஙகைப் பற்றிய கல்வெட்டொன்று விகாரை பூமியில் உள்ளது.

கண்டி சம்பிரதாயத்து ஓவியங்கள் உள்ள சிலை மண்டபத்திற்குள் உள்ள சிலைகளும் கண்டி யுகத்துச் சம்பிரதாயத்தைச் சார்ந்ததாகும்.