முகப்பு Sites வெலிகம குஷ்ட ராஜகல

வெலிகம குஷ்ட ராஜகல

மாத்தறை கொழும்பு வீதியில் 12 மைல் அளவு கொழும்பை நோக்கி போகும்போது வெலிகம நகர எல்லையிலுள்ள அக்ரபோதி விகாரையை அண்மித்து அமைந்துள்ளது. வெலிகம பிரதேச செயலாளர் பிரிவிற்கு சேர்மதியாகும்.

கல் துவாரத்தில் நிர்மானித்துள்ள இந்த அவலோகிதேஸ்வர போதிசத்வரின் சிலை 383 செ.மீ. உயரமானது. சிலையின் வடிவமைப்பின் படி பார்க்கும் போது கி.பி. 6 – 7 ம் நூற்றாண்டுகளுக்கு சேர்மதியானது என மதிக்கலாம். உடலின் மேற்பகுதி வெறுமையாகவும் கீழ்ப்பகுதி அழகான ஆடையலங்காரத்துடனானது. கழுத்தில் மாலைகள் சிலவற்றும் உள்ளது. கைகளில் வளையல்களும் பாதையில் சிலம்பும் உள்ளது. இடது வலது கைகள் ஒவ்வொரு அடையாளங்கள் காண்பிப்பதோடு தலைப்பாகையில் அமிதாஹ தியானி எனும் புத்தரின் உருவங்கள் நான்கு உள்ளது. இச் சிலை கி.பி. 6 – 7 ம் நூற்றாண்டுகளில் இலங்கையில் மகாயாண எனும் புத்த மதம் இருந்ததை நிரூபிக்கின்றுது.

அவலோகிதேஸ்வர போதிசத்வர் சிலையென தெளிவான இச் சிலையைப் பற்றி பல பேச்சுகள் உள்ளது. தோல் வியாதியொன்று இருந்த பிறநாட்டு இளவரசன் அக்ரபோதி விகாரையை தரிசிக்க யாத்திரை வந்தபோது விஷ்னு கடவுளுக்கு நேர்த்திக்கடனாக நேர்ந்ததற்காக இதை நிர்மானித்ததெனவும் அதே போல் தோல் வியாதி உள்ள இலங்கை இளவரசன் அக்ரபோதி விகாரைக்கு நேர்ந்த பின் குஷ்ட வியாதி சுகமான பின் சிலையை நிர்மானித்ததெனவும் பேச்சு வழக்கில் உள்ளது. எது எப்படியிருந்தாலும் போதிசத்வர் சிலையாக அறிவதற்கான தடயங்கள் உள்ளதினால் பேச்சு வழக்கில் இருப்பது உண்மையென ஏற்றுக் கொள்ள நேறிடுகின்றது. ஏனெனில் போதிசத்வர்களுக்கு நோயகள் சுகப்படுத்தும் தன்மை இருந்ததாக நம்பப்படுவதனாலாகும்.