முகப்பு Sites மாத்தறை நட்சத்திரக் கோட்டை

மாத்தறை நட்சத்திரக் கோட்டை

மாத்தறைக் கோட்டை கி.பி. 1761 ல் மாத்தறை புரட்சியின் பின் சிங்களவரைச் சார்ந்த கோட்டை திரும்பவும் கி.பி. 1762 ல் ஒல்லாந்தர் வசமாக்கிக் கொண்டு கி.பி. 1763 ல் மாத்தறைக் கோட்டையை பாதுகாக்கும் பொறுட்டு நட்சத்திர வடிவமான கோட்டையை நிர்மானித்துள்ளது. கி.பி. 1763 ல் இந்த கோட்டையை கட்ட ஆரம்பித்து கி.பி. 1765 ல் முடிவு செய்துள்ளது. றிடவுட் வேன் எனும் ஆட்சியாளரின் கீழ் ஒருகெம முகந்திரம் என்பவர் கட்டிட வேலைகள் பொறுப்பேற்று செய்துள்ளார். சிறிய அளவிலான படைகளை தங்க வைப்பதற்காக நட்சத்திரக் கோட்டையை பயன்படுத்தியுள்ளார்கள்.

கோட்டையைச் சுற்றி நீர் அகழியொன்று நிர்மானித்து அதை கடப்பதற்கு அகற்ற முடியுமான பாலம் ஒன்றும் உள்ளது. வில்வளைவான பிரதான வாசல் வழியாக பிரவேசித்த பின் அதே போன்று இரண்டு வாசல்களும் அறைகளும் அமைந்துள்ளது. கோட்டை மத்தியில் கிணறொன்றும் உள்ளது. நட்சத்திரக் கோட்டை கி.பி. 1796 ல் ஆங்கிலேய ஆட்சி கைப்பற்றபட்டுள்ளது. 1980 ல் இருந்து தொல்லியல் திணைக்களம் வசமாக்கிக் கொண்ட சின்னமாக இருக்கின்றது.