முகப்பு Sites மாத்தறைக் கோட்டை

மாத்தறைக் கோட்டை

முதல் தடவையாக மாத்தறைக் கோட்டையை போத்துகேயர்களால் நிர்மானித்ததாக கருதப்படுகின்றது. போத்துகேயர்களால் கோட்டை தொன் ஜுவன் தர்மபால அரசனின் உதவியின் மேல் கி.பி. 1595 ல் மாத்தறை கோட்டை செய்ததென மதித்தாலும் தற்சமயக் கோட்டை ஒல்லாந்தர்களினால் கி.பி. 1645 ல் நில்வலா கங்கை முகத்துவாரம், சிறு கடல், பெருங் கடல் இடையிலான முக்கோண பூமியில் இதை நிர்மானித்துள்ளது. ஆனால் கோட்டை வாசலில் இப்போது காணக் கிடைக்கும் கி.பி. 1789 எனும் திகதி கோட்டையை நிர்மானித்த திகதி அல்ல அதை திரும்பவும் திருத்தியமைத்த திகதியின் தடயமாகும்.

ஓல்லாந்தர்களினால் நிர்மானித்த கோட்டை கி.பி. 1761 ல் மாத்தறை புறட்சி என அறிமுகம் செய்யும் மலைநாட்டு ஆக்கிரமிப்புக் காரணமாக சிங்களப் படைக்கு சொந்தமாகியுள்ளது. ஆனால் கி.பி. 1762 பெப்ருவரி 02 ம் திகதி திரும்பவும் ஒல்லாந்தர் வசமாகியது. கி.பி. 1796 பெப்ருவரி 24 ம் திகதி மாத்தறைக் கோட்டையை ஒல்லாந்தர்களால் ஆங்கிலேயரிடம் பாரம் கொடுத்துள்ளது.

மாத்தறைக் கோட்டை கருங்கல்லினாலும் சுண்ணாம்புக் கல்லினாலும் நிர்மானித்ததோடு கோட்டை மதிலும் வாசலும் மிக பாதுகாப்பாக உள்ளது. ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தில் கோட்டைக்குள் யானை லாயம், அரச அதிபரின் விடுதியும், பழமையான கோவிலும், கருவா, பாக்கு, வெடி மருந்து கலஞ்சியமும் இருந்துள்ளது. இங்கு விசேஷமான புரான கட்டிடமாவது முகட்டுடனான மாடியுடனான ஒல்லாந்தரின் கட்டிடக்கலையைக் காண்பிக்கின்ற புரான ஒல்லாந்தரின் பள்ளியாகும். புள்ளியிலுள்ள கல்லறைகளில் மிக பழமையான கல்லறை கி.பி. 1686 ல் செய்ததற்கான தடயங்கள் உள்ளது.

மாத்தறைக் கோட்டை ஆங்கிலேய ஆட்சி காலத்தில் சேர்ந்த கட்டிடங்களாக நீதி மன்றக் கட்டிடம், வாடி வீடு, மாத்தறை பொலிஸ் நிலையம் போன்றவையாகும்.