முகப்பு Sites கண்டி ஸ்ரீ தலதா மாளிகை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை

கண்டி தலதா மாளிகை மூன்று பிரதான கட்டிடங்களால் உள்ளதாகும். வெடிஹிட்டி மாளிகை, பத்திரிப்புவ (என்கோண மண்டபம்), அலுத் மாளிகை (புது மாளிகை) என்றாகும். முதலாவது விமலதர்மசூரிய அரசன் கி.பி. 1593 – 1603 இடைப்பட்ட காலத்தில் செய்வித்ததோடு அதன் சில பகுதிகள் இன்று காணக் கிடைக்கவில்லை. கி.பி. 1687 – 1707 இடைப்பட்ட காலத்தில் இரண்டாவது விமலதர்மசூரிய அரசனால் மூன்று மாடிக் கட்டிடம் தலதா தாதுவை வைப்பதற்காக நிர்மானிக்கப்பட்டது. தற்சமயம் காணக் கிடைக்கும் என்கோண மண்டபத்துடனானப் பகுதி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்ஹ அரசனின் ஆட்சிக் காலத்தில் 1798 – 1815 ல் தேவேந்திர மூலாச்சாரி எனும் சிற்பியால் நிர்மானிக்கப் பட்டதாகும். இந்தக் கட்டிடம் விசேட வைபங்களில் அரசன் மக்களுக்கு போதனை செய்வதற்காக இந்த இடம் உபயோகப் படுத்தியுள்ளார்.