முகப்பு Sites குடும்பிகலை

குடும்பிகலை

அம்பாறை மாவட்டத்தில் பானம பிரதேச செயலாளர் பிரிவில் பானம கிராமத்தில் அமைந்திருக்கின்றது. பானமையிலிருந்து உருகுனை சரணாலத்திற்கு போகும் பாதையில் இந்த இடம் அமைந்துள்ளது. பெரியளவிலான கற் பாறைகளும் கல் சம வெளியாலும் உள்ள இந்த பிரதேசம் கடும் காட்டு நடுவில் அமைந்துள்ளது. அதிகளவு நீர்வடி வெட்டப்பட்ட குகைகள் உள்ளது. அதில் சிலவற்றில் கி.மு. யுகத்தைச் சார்ந்த பிரஹ்மி கல்வெட்டுகள் காணலாம். சில கற் பாறைகளின் மேல் கட்டிடங்களின் சிதைவுகளும் பெரிய கற் பாறையான குடும்பிகலையின் மேல் இரண்டு தாது கோபுரங்களின் சிதைவுகளும் இருக்கின்றது.