முகப்பு Sites சமன்கல

சமன்கல

அம்பாறை மாவட்டத்தில் வெவ்கம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இலக்கம் 28 கொலனியில் கொஹொம்பான எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. அம்பாறை கொனாகொல்ல வீதியில் போய் கொஹொம்பான சந்தியால் மேற்கே திரும்பி ஐந்து மைல் போகும்போது சமன்கல மலை சந்திக்கின்றது. இங்கு கிழக்கு இறக்கத்தில் கி.மு. யுகத்தைச் சார்ந்த பிரஹ்மி எழுத்துக்களால் செதுக்கிய கல்வெட்டுள்ள குகைகள் அனேகம் உண்டு. இதில் ஒரு குகையை அண்மித்துள்ள கற் பாறையின் இறக்கத்தில் சான்சி எனும் தூபியின் வடிவம் கொண்ட அடையாளம் நிர்மானித்துள்ளது.