முகப்பு Sites திரியாய வடதாகெய

திரியாய வடதாகெய

திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு கட்டுகுளம் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் திரியாய் கிராமம் அமைந்துள்ளது. திருகோணமலை, புல்மொடை பாதையில் 27, 28 மைல் கல்களுக்கிடையில் திரும்பி திரியாய் கிராமத்திற்கு போகலாம். இந்த ஊரின் மேற்கு பக்கத்தில் அமைந்த பாறையில் இந்த வட்டதாகெய நிர்மானித்துள்ளது. கோபுரத்திற்கு பிரவேசிப்பதற்காக பாறையின் தென் பகுதியல் படிக் கட்டுகள் நிர்மானித்து உள்ளது. முதலாவதாக சிறிய அளவிலான தூபி நிர்மானித்ததோடு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இந்த தூபியை விரிவாக்கி வடதாகெய நிர்மானித்துள்ளது. வட்டமான மேடையின் மேல் நிர்மானித்துள்ள இதைச் சுற்றி இரண்டு கற் தூண் வரிசைகள் இருக்கின்றது. அதைச் சுற்றி வட்டமான மதில் அமைத்திருக்கின்றது. இந்த மதிலின் இடத்திற்கிடம் மரத் தூண்கள் வைப்பதற்காக செய்த துவாரங்கள் உள்ளது. நாலாபுரத்தாலும் இதற்கு பிரவேசிப்பதற்கு நான்கு படிக் கட்டுகள் அமைத்துள்ளது. நான்கு பக்கங்களிலும் பூ வைப்பதற்கான ஆசனங்கள் நான்கும் அமைத்துள்ளது. அதை அண்மித்த குகையில் கி.மு. யுகத்திற்கு சேர்மதியான கல்வெட்டொன்று இருக்கின்றது. இங்கே இன்னுமொரு பாறையில் கி.பி. 8 ம் நுற்றாண்டிற்கு சேர்மதியான சமஸ்கிருத மொழியில் செய்வித்த கல்வெட்டு ஒன்று காணலாம். தபஸ்சுபல்லுக எனும் வியாபாரச் சகோதரர்கள் இருவர் செய்வித்த கிரிஹன்டு சாய எனும் தூபி இதுவென மக்கள் பேச்சுவழக்கில் உள்ளது. இதை அண்மித்து விகாரை மண்டபத்தினதும் வேறு கட்டிடங்களினதும் சிதைவுகள் காண முடியும்.