மல்வில தொல்லியல் பாதுகாக்கப்பட்ட இடம்

வணாத வில்லுவ பிரதேச செயலாளர் பிரிவில் கரதிபுவ கிராம அலுவலர் பிரிவில் சாலியபுர கிராமத்தில் மல்வில புரான ரஜமகா விகாரை அமைந்துள்ளது. புத்தளத்திலிருந்து மன்னார் பாதையில் ஒன்பது மைல் தூரத்திலான கரதிபுவ கிராமத்தால் திரும்பி இரண்டு மைல் கிழக்கு பக்கமாக பயணம் செய்தால் விகாரை பூமிக்கு போகலாம். இந்த விகாரை சாலிய இளவரசனால் செய்விக்கப்பட்டது என பேச்சு வழக்கில் உள்ளது. புண்ணிய பூமியில் புரான சிதைவுகளாக அறியக்கூடிய தாதுகோபுரம், கற் தூண்கள், மூன்று கட்டிடங்கள், போதிகரையாக அறிமுகம் செய்யும் ஒரு கட்டிடம், கல்லிலான புத்தர் சிலை, கட்டிடங்களுக்கு உட்பிரவேசிக்கக் கூடிய சந்திரவட்டக் கல், கைப் பிடிக் கல்லுடனான படிக்கட்டுத் தொகுதியும் காணக் கிடைக்கின்றது.

வியாழக்கிழமை, 21 ஜூன் 2012 05:42 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது