தம்பேகொட அவலோகிதேஸ்வர போதிசத்வச் சிலை

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் புத்தலை பிரதேச செயலாளர் பிரிவில் ஒக்கம்பிடியவை அண்மித்த தம்பேகொடவில் இது அமைந்துள்ளது.

வெல்லவாய மொனராகலைப் பாதையில் போய் கும்புக்கனே சந்தியால் வலது பக்கத்திலுள்ள ஒக்கம்பிடியவிற்கு போகும்போது மாளிகாவிலை சந்திக்கின்றது. அதிலிருந்து 1 கி.மீ. தூரம் போனபோது இந்த இடத்திற்கு போகலாம்.

அனேக மனித செயற்பாடுகளினால் அழிவடைந்து 1990 ஆண்டில் அளவு தொல்லியல் திணைக்களத்தின் தலைமையில் முதல் இருந்த மாதிரியாக நிர்மானித்த சிலையாகும். தனிக் கல்லினால் செய்துள்ள இந்த சிலையின் உயரம் 10 மீட்டர்கள் ஆகும். அதன் பாரம் 40 தொன்கள் ஆகும். இச் சிலை பலத்திலும், கம்பீரத்தாலும், அரச கௌரவத்தை காண்பிக்கும் வண்ணமாக செதுக்கப்பட்ட போதிசத்வர் சிலையாக அறிமுகம் செய்யலாம். கைச் சமிக்ஞையுடனான இந்தச் சிலையின் தலைப்பாகையில் சிறிய சமாதி நிலையிலான புத்தர்ச் சிலை உள்ளது. கம்பீரத்தைக் காண்பிக்கும் இச் சிலை ராஜ ஆபரணங்களால் அலங்கரித்துள்ளது. மலைப் பாறையின் மேல் ஒன்றுகொன்று சிறிதான மாடிகளின் உச்சியின் மேல் அமைந்துள்ள சிலையைச் சுற்றி சிலை மண்டபம் இருந்ததற்கான தடயங்கள் மூலம் தெரிகின்றது.

அவலோகிதேஸ்வர போதிசத்வரின் சிலைத் தயாரித்தல் மகாயாண பொளத்த சமயத்துடன் ஆரம்பித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு, நோய்களை சுகமாக்கும் தன்மை இந்தச் சிலை வணங்குதல் மூலம் எதிர்ப்பார்த்துள்ளார்கள். உருகுனையில் அக்போ குமரன் காணகாமயில் குருடர்களுக்கும் நோயாளிகளுக்கும் வைத்தியச் சாலைகள் செய்வித்ததென மகாவம்ஸத்தில் குறிப்பிடும் புண்ணிய பூமி இதுவாகும். அனுராதபுர கடைசி காலப் பகுதியில் போதிசத்வர் வணங்குதல்கள் மிக பிரசித்தி பெற்றிருந்ததை இந்த சிலைகளின் மூலம் நன்றாக ஊர்ஜிதமாகின்றது.

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2012 09:46 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது