கொடியாகலை

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவைச் சார்ந்த மையில்ல கிராமத்தில் அமைந்துள்ளது.

வெல்லவாய பொத்துவில் பாதையில் 174 மைல் கல்லினால் வலது பக்கமாக போகும் பாதையில் 12½ மைல் போகும் போது இந்த இடம் சந்திக்கின்றது.

கோடியாகலை கொலனிக்கு 06 மைல் அளவு வலது பக்கமாக உள்ள காட்டு நடுவே அமைந்த இந்த இடத்தில் சயனிக்கும் புத்தர்ச் சிலையுடன் ஓவியங்கள் உள்ள குகை விகாரைக் காணக் கிடைக்கின்றது. சயனிக்கும் புத்தர்ச் சிலை செங்கட்டிகளாலும் மண் பூச்சினாலும் செய்து சுண்ணாம்பு பூச்சு பூசப்பட்டதாகும். புதையல் கள்வர்களினால் சிலையின் சில பகுதிகள் அழிவடைந்துள்ளது. குகையின் முகட்டு பகுதி அழகான ஓவியங்களினால் உள்ளதோடு புத்தர்ச் சிலையின் தலைக்கு மேல் பகுதி பின்புறத்தில் பூக்களும் யானை உருவங்களும் சித்திரங்களாக வரைந்துள்ளார்கள். இங்குள்ள அழகான ஓவியங்களுக்கிடையில் விதவிதமான பூக்களின் வடிவங்களும், சீகிரியா கண்ணிகளுக்கு சமமான பெண் உருவங்களும், விதவிதமான மனிதரின் மிருகங்களின் உருவங்களும் காணக் கிடைக்கின்றது.

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2012 09:32 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது