புதுருவாகலை

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவில் புதுருவாகலை கிராம அலுவலர் பிரிவில் புதுருவாகலை கிராமத்தில் அமைந்துள்ளது.

வெல்லவாய நகரத்திலிருந்து திஸ்ஸமகாராமை பாதையில் 4 கி.மீ. போனபோது சந்திக்கும் புதுருவாகலை பாடசாலை முன்னதாக உள்ள பாதையில் 3 கி.மீ. போகின்ற போது இந்த இடத்திற்கு வரலாம்.

இயற்கையான கற் பாறையில் அரைவாசி வெளிவரும் வகையில் செதுக்கப்பட்ட 7 சிலைகள் இந்த இடத்தில் காணக் கிடைக்கின்றது. சப்த மஹாயாண சிலைகளாக மதிக்கும் இங்கு பிரதான புத்தர்ச் சிலைக்கு இரு பக்கமும் 3 சிலைகள் வீதம் காணக் கிடைக்கின்றது. மத்தியில் உள்ள பிரதான புத்தர்ச் சிலை 51 அடி உயரமாகுமிடையில் தற்போதைய இலங்கையிலுள்ள உயரமான சிலை இதுவென மதிக்கப்படுகின்றது. தாமரை மேடையின் மேல் அமர்ந்திருக்கும் பிரதான புத்தர்ச் சிலையின் வலது கை அபய எனும் சமிக்ஞையை காண்பிக்கின்றது. வலது புறமாக உள்ள பரிவாரச் சிலைகளுக்கிடையில் அவலோகிதேஸ்வர போதிசத்வர் சிலை, தாரா தேவதை, சுதன குமாரன் என்பவர்களின் சிலைகள் செய்துள்ளது. இடது புறமாக மைத்ரீ போதிசத்வரின் சிலை, வஜ்ரபாணி போதிசத்வர் சிலை, அறிந்து கொள்ள முடியாத ஒரு தேவதையின் சிலையும் காணக் கிடைக்கின்றது. இலங்கையில் மகாயாண மதக் கூட்டமைப்பின் சிலைகளின் ஒன்று கூடிய இடமாக இந்த இடமென அறிமுகப்படுத்தலாம்.

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2012 09:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது