திஸ்ஸமகாராம சந்தகிரி மகாசாயவும் விகாரை பூமியும்

திஸ்ஸமகாராமை குளத்திற்கு கிழக்கால் ஒரு மைல் தொலைவில் சந்தகிரி எனும் தூபி அமைந்ததோடு திஸ்ஸமகாராமை செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.

சந்தகிரிய தூபி உருகுனை ஆட்சி செய்த மகாநாக அரசன் அல்லது காவன்திஸ்ஸ அரசன் காலத்தில் செய்ததாக நம்பப்படுகின்றது. வம்சக் கதைகளின் தடயங்களின் படி I வது விஜயபாகு அரசன் (கி.பி. 1055 – 1110) சந்தகிரி விகாரை அல்லது சந்தன விகாரை தூபியை திருத்தியதாக கூறப்படுகின்றது. கி.பி. 2 ம் நூற்றாண்டில் ஸ்ரீ மகா போதியை நாட்டும் வைபவத்தில் அஷ்டபல போதி மரங்களில் ஒன்று சந்தன கிராமத்தில் நாட்டியதாக சொல்லப்படுகின்றது. கிட்டிய காலத்தில் செய்த அகழ்தல் ஆராய்ச்சியின் போது பெரிய போதிகரையொன்று கிடைத்துள்ளது. மேல் கூறப்பட்ட போதி மரம் நாட்டப்பட்ட போதிகரை இதுவென சொல்லப்படுகின்றது. இந்த போதிகரைக்கு அண்மித்து சிலை மண்டபத்தினதும் கட்டிடங்களினதும் சிதைவுகள் உள்ளது. அவை எதுவானது என நிச்சயித்து சொல்ல முடியாத நிலையில் உள்ளது. இன்னும் இந்த விகாரையை அண்மித்து கல்லிலான என்கோணம் கொண்ட கல்வெட்டுத் தூண் ஒன்று உள்ளது. இது பாதிகாபய அரசனின் மகனுடையவும் வசப அரசனுடையவும் கல்வெட்டாகும். அந்த கல்வெட்டின் படி திசா வாவியின் வரிகளும் அபகமக எனும் ஊரின் வாவியும் பதிகம வயல்களும் விகாரையின் பூஜைகளுக்காக அர்ப்பணித்ததாக குறிப்பிடுகின்து.

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2012 09:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது