ரங்கிரி தம்புலு ரஜமகா விகாரை

வலகம்பா அரசனால் கி.பி. 17 – 43 ல் செய்வித்ததாக குறிப்பிடுகின்றது. வேட்டையாடச் சென்ற சீதா எனும் வேடனினால் இந்த குகையைப் பற்றி அறிவித்ததென்றும் அரசனால் குகைகளில் நீர்வடி வெட்டி சிலை மண்டபமாகவும், மகரஜ விகாரையும், தெவ் ரஜ விகாரையும் செய்வித்ததென மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது. இந்த விகாரையை வலகம்பா அரசனால் செய்வித்ததென ராஜரத்னாகர எனும் நூலிலும் ஓலைச் சுவடிகளிலும் எழுதியுள்ளது. கி.பி. 1187 – 1196 எனும் காலங்களில் நிஸ்ஸங்கமல்ல அரசன் விகாரையை திருத்தியமைத்து சிலைகளில் பொன் முலாம் பூசியதென்றும் அதனால் அதை ரங்கிரி தம்புலு விகாரை எனும் பெயர் சூட்டியதாகவும் கல்வெட்டுகளில் குறிப்பிடுகின்றது. இங்கு குகை விகாரைகள் ஐந்து உள்ளதோடு அலுத் மகா விகாரையை கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்ஹ அரசன் செய்வித்ததெனவும் இரண்டாவது அலுத் விகாரை 18 ம் நூற்றாண்டில் துல்லாவே எனும் கோமானினால் செய்வித்ததென்றும் குறிப்பிடுகின்றது. இந்த விகாரை கண்டி யுகத்திலிருந்த இலங்கையின் மிகப் பெரிய கலைக்கூடமாக இருந்ததென சொல்ல முடியும். இங்கு 153 சிலைகள் உள்ளன. இதை விட வலகம்பா அரசன், நிஸ்ஸங்கமல்ல அரசன், கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்ஹ அரசன் எனும் அரசர்களின் மூன்று சிலைகளும் உபுல்வன், தாரா தேவதை, நாத விஷ்னு எனும் நான்கு தேவர்களின் சிலைகளும் இங்கு காணக் கிடைக்கின்றது. இங்கு சித்திரங்கள் சிலகம எனும் பரம்பரை சித்திரக்காரர்களால் வரைந்துள்ளது.

திங்கட்கிழமை, 02 ஜூலை 2012 03:53 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது